அமெரிக்க வாழ் இந்தியர்கள் 130 பேருக்கு முக்கிய பதவி- ஜோபைடன் நடவடிக்கை
வாஷிங்டன்:
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அமெரிக்க நிறுவனங்களில் பல தமிழர்கள் உயர்ந்த பதவிகளை வகித்து வருகின்றனர். இப்போது அரசு உயர் பதவிகளும் அவர்களை தேடி வந்துள்ளது.
ஏற்கனவே 2020-ம் ஆண்டு முதல் அந்த நாட்டின் துணை அதிபராக இந்திய வம்சாவளியை அதுவும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ் இருந்து வருகிறார். அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்களிப்பு அதிகம்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோபைடன் தனது நிர்வாகத்தில் 130-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்களை நியமித்து உள்ளார். அந்நாட்டின் பல்வேறு துறைகளில் அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்க தூதரகத்தில் பலர் இடம் பெற்று உள்ளனர்.
வெளியுறவு துறை துணை தொடர்பாளராக வேதாந்த் பட்டேல் உள்ளார். கரீமா வர்மா டிஜிட்டல் இயக்குனராக பதவி வகித்து வருகிறார். இந்த பதவிக்கு நியமிக்கபட்ட முதல் பெண் இவர் ஆவார்.
இதற்கு முன்பு அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தனது நிர்வாகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 80 பேரும் அதற்கு முன்பு இருந்த ஒபாமா நிர்வாகத்தில் 60 பேரும் உயர் பதவிளில் இருந்தனர்.
தற்போது அதனை முறியடிக்கும் வகையில் ஜோபைடன் 130 பேரை நியமித்து சாதனை படைத்துள்ளார்.
No comments
Thank you for your comments