காஞ்சிபுரம் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் மண்டல அபிஷேக பூர்த்திவிழா - வீதி உலா
காஞ்சிபுரம் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் மண்டல அபிஷேக பூர்த்திவிழா ஒட்டி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் பத்ரகாளி அம்மன் கோவில் தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்று நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து அனுதினமும் மண்டல அபிஷேக பூஜை நடைபெற்று வந்தது இந்நிலையில் மண்டலபிஷேக பூர்த்தி விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் காலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மாலை உற்சவர் அம்பாளுக்கு சிறப்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ண விளக்கு ஒளியில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இவ்விழாவை ஒட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலமாக காட்சியளித்தது திருக்கோவில். இவ்விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கும்பாபிஷேக திருப்பணி குழுவினர் இணைந்து சிறப்பாக செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.


No comments
Thank you for your comments