Breaking News

எடப்பாடியில் அதிமுகவினர் கொண்டாட்டம்

எடப்பாடி:

அண்மையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக, எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, எடப்பாடி பகுதி அதிமுகவினர் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் எடப்பாடி நகர அதிமுக சார்பில் புதன் அன்று காலை நடைபெற்ற நிகழ்வில், நகர செயலாளர் ஏ. எம்.முருகன் தலைமையிலான அதிமுகவினர். எடப்பாடி பேருந்து நிலைய பகுதியில் பட்டாசு வெடித்தும், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

முன்னதாக எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பணி சிறக்க வேண்டி அதிமுகவினர் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் நகர மன்ற தலைவர் டி. கதிரேசன், கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி, நாராயணன் உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments