Breaking News

நாளை (07.07.2022 ) பரந்தூர் துணை மின் நிலையம் பகுதிகளில் மின் விநியோகம் தடை அறிவிப்பு

காஞ்சிபுரம், ஜூலை 6-

பரந்தூர் துணை மின் நிலையம் மின்சாதன பராமரிப்பு பணிகள் முன்னிட்டு மின் விநியோகம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.




பரந்தூர் 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (07.07.2022) வியாழக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. 

அந்த நேரத்தில் காரை, சிறுவாக்கம், எடையார்பாக்கம், பட்டுமுடையார்குப்பம், துளசாபுரம், கூத்திரம்பாக்கம், வரதாபுரம், தண்டலம், ஏகனாபுரம், கண்டிவாக்கம், பிச்சிவாக்கம், செல்லம்பட்டிடை, கோட்டுர், நெல்வாய், மேல்பொடவூர், வேடல், ஆண்டி சிறுவள்ளூர், கொட்டவாக்கம் மற்றும் பரந்தூர் ஆகிய பகுதிகளில் 07.07.2022 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை மின் தடை ஏற்படும். 

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments