Breaking News

தமிழ்நாடு வனத்துறை இந்தியாவிலேயே முதல் சிறந்த வனத்துறையாக மாறும்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.இராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 




காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில்  05.07.2022 அன்று மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.இராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது… 

நமது முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து, குறைகளையும் கேட்டறிந்து அவற்றின்மீது விரைவாக நடவடிக்கை எடுத்து அவர்களின் கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டுமென்றும், தமிழ்நாட்டில் வனபரப்பை ஆண்டுதோறும் அதிகரித்து வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணத் தொகைகளை மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்க எந்த இடையூறுகளும் இல்லாமல் வசதிகளை ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் இத்தகைய கூட்டங்களை பதினாறு மாவட்டங்களில் நடத்தப்பட்டது 


தொடர்ந்து, கூட்டங்களை நடத்தி தமிழ்நாட்டு வனப்பரப்பை 33% அதிகரிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணத்தை முழுமையாக நிறைவேற்ற இந்த துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகளின்  பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. மற்ற துறைகளான நகர்ப்புற வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, போன்ற துறைகளிடம் இருக்கின்ற நிலப்பரப்பிலும், நெடுஞ்சாலைகளிலும், சாலை ஓரங்களிலும், முழுமையாக மரக்கன்றுகளை நட்டு, இந்த தமிழ்நாட்டை ஒரு பசுமை தமிழகமாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, நமது முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு கிரீன் கிளைமேட் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அந்த நிறுவனத்தின் தலைவராக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டு அதன் கீழ், தமிழ்நாடு கிரீன் மிஷின் (தமிழ்நாடு green mission), தமிழ்நாடு வெப்ளான்ட் மிஷின் (தமிழ்நாடு webland mission), தமிழ்நாடு கிளைமேட் சேஞ்ச் மெஷின் (தமிழ்நாடு, climate change mission) என்ற மூன்று அமைப்புகளையும் கொண்டு அனைத்து இடங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். 

எதிர்காலத்தில் தமிழ்நாடு வனத்துறை இந்தியாவிலேயே முதல் சிறந்த வனத்துறையாக மாறும் அதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாக அவர்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்கள். 

இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 345 நபர்களுக்கு பருவகால பணியாளருக்கான பணி நியமன ஆணைகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.இராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் திரு.V.சையத் முஜமில் அப்பாஸ், இ.வ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர்,  காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருமதி.ம.வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் விவசாயிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments