காஞ்சிபுரத்தில் போதைப் பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் போதைப் பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போதைப் பொருட்கள் முற்றிலுமாக தமிழக அரசு ஒழிக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் பே. மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலை செயலாளர் திரு . இசக்கிமுத்து மாநில தேர்தல் பணி செயலாளர் மி.க.திரு. செல்வகுமார் கலந்துகொண்டு கண்டனுரை ஆற்றினார்.
அப்பொழுத தமிழகத்தில் முற்றிலுமாக போதைப் பொருட்களான குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை உடனடியாக அரசு ஒலிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிழக்கு மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் உமாபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சக்தி கமலாமால் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments