Breaking News

அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

ஸ்ரீநகர்: 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். 

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கடந்த 30ம் தேதி முதல் பனிலிங்க யாத்திரை மீண்டும் தொடங்கியது. வருகிற ஆகஸ்டு மாதம் 11ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறுகிறது. 

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்து வருகின்றனர். 

இந்தநிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

பக்தர்கள் யாரும் யாத்திரை செல்லமுயற்சி செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


 

No comments

Thank you for your comments