Breaking News

நான்கு நாட்களுக்கு (07-07-2022 to 09-7-2022 & 12-07-2022) மதுபானக் கடைகள் மூடல் (Dry Day)

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத் தேர்தல் (நகர்புறம் மற்றும் கிராமபுறம்)  நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் இடங்கள் அதனை சுற்றி 5 கி.மீ.க்குள் இயங்கும் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், FL1 முதல்  FL11 வரை (FL6 தவிர) உரிமம் பெற்ற ஓட்டலுடன் கூடிய மதுபானக் கூடங்கள், கீழ்கண்ட நாட்களில் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பினை தொடர்ந்து,

7.07.2022 அன்று காலை 10.00 மணி முதல் 9.7.2022 (தேர்தல் நாள்) நடுஇரவு 12.00 மணி வரை மற்றும் 12.7.2022 அன்று வாக்கு எண்ணும் நாள் முழுவதும் வாக்கு எண்ணும் மையத்தை 5 கி.மீ. சுற்றளவில் இயங்கும் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், FL1 முதல்  FL11 வரை (FL6 தவிர) உரிமம் பெற்ற ஓட்டலுடன் கூடிய மதுபானக் கூடங்கள், அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் (IMFL) அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (Bar), ஆகியவைமேற்படி நாட்கள் முழுவதுமாக மூடப்பட வேண்டுமென காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments

Thank you for your comments