Breaking News

சமூக நீதி பற்றி பேசும் தலைவர்கள் அதை பின்பற்றுவதில்லை... திமுகவுக்கு சவால் விட்ட அண்ணாமலை

சமூக நீதி பற்றி பேசும் தலைவர்கள் அதை பின்பற்றுவதில்லை. அந்த வகையில் திருமாவளவன் போன்றவர்கள், கண்ணாடி முன் நின்று தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தமிழக மக்களை, திமுக அரசு குழப்பி வருகிறது.  

பிரதமர், ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் திட்டங்களை வகுத்து வந்தார். தமிழகத்தில், 'ஆப்ரேஷன் கஞ்சா' என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

தமிழக பாஜக சார்பில், கீழ்ப்பாக்கத்தில்  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் எட்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 



இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘குடியரசு தலைவர் தேர்தலில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் நிறுத்தப்பட்டு உள்ளார். இது, பாஜகவின் சிறப்பான சமூக நீதிக் கொள்கைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

பாஜக கொள்கைகளுக்கு ஒத்துப்போகாத பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூட திரௌவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், சமூக நீதி பற்றி பேசும் தலைவர்கள் அதை பின்பற்றுவதில்லை. அந்த வகையில் திருமாவளவன் போன்றவர்கள், கண்ணாடி முன் நின்று தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தமிழக மக்களை, திமுக அரசு குழப்பி வருகிறது. 

ஜனாதிபதி வேட்பாளராக ஒரு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்மணி அறிவிக்கப்பட்ட உடன், முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது.  சமூக நீதி பற்றி பேசும் அவருக்கு பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க தைரியம் இருக்கிறதா? தனிமனிதனுக்கு சுய மரியாதை ஏற்படுத்தி தந்தது மோடி அரசு. ஊழல் நாடாக இருந்த இந்தியாவை, பதவி ஏற்ற பின் சாதனை நாடாக மாற்றி காட்டியவர் நரேந்திர மோடி.

திமுகவை பொறுத்தவரை கட்சிதான் குடும்பம்; குடும்பம் தான் கட்சி. இப்படிப்பட்ட சூழலில் மோடி போல வரவேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லை. 

பிரதமர், ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் திட்டங்களை வகுத்து வந்தார். தமிழகத்தில், 'ஆப்ரேஷன் கஞ்சா' என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது’ என்று பேசினார்.

No comments

Thank you for your comments