Breaking News

காஞ்சிபுரம் வழியாக செல்லும் தமிழக முதல்வருக்கு காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு.

திருப்பத்தூர்,வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக செல்லும் தமிழக முதல்வருக்கு காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு...


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,பேரூந்து நிலையம் மற்றும் பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.



இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் வழியாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சென்றார்.



காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு காஞ்சிபுரம்   மாவட்டம் காரைப்பேட்டை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்   காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர்  உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்  க.சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார்,மேயர் மகாலட்சுமி,ஒன்றிய செயலாளர்கள், இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும்  கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் காத்திருந்து,  பூச்செண்டு களையும், புத்தகங்களையும், வேட்டிகளையும், பரிசாக அளித்து, வாழ்த்து கோஷங்களை எழுப்பி  உற்சாக  வரவேற்பு அளித்தனர்.

எம்பி,எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகளின்  வரவேற்பினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

முதலமைச்சர் வருகையை ஒட்டி சென்னை  பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

No comments

Thank you for your comments