Breaking News

ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,  இன்று (08.06.2022)  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,  தெரிவித்ததாவது:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தில் 1431 ஆம் பசலி வருவாய் தீர்வாயம் ரயத்துக்கள் கூட்டம் கடந்த 1.6.2022 முதல் இன்று வரை நடைபெற்று வருகிறது. ஜமாபந்தியில் மொத்தம் 1054 மனுக்கள் வரப்பெற்று, 173 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 

881 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களில் 31 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 17 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, 54 பயனாளிகளுக்கு முழுபுலம் பட்டா மாற்றம், 18 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றம், 30 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, பழங்குடியின மக்களுக்கு மூலிகை மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் மற்றும் நர்சரி அமைக்க உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக 5 பயனாளிகளுக்கு தேய்ப்பு பெட்டி, 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், 12 பயனாளிகளுக்கு கிறிஸ்தவ மகளிர்  உதவும் சங்க உதவித்தொகை என மொத்தம் 173 பயனாளிகளுக்கு ரூ.30,45,750/- மதிப்பிலான நலத்திட்ட உதவி தொகைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் திரு.க.தேவேந்திரன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் திரு.சேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ரவிச்சந்திரன், வருவாய் வட்டாட்சியர் திரு.லோகநாதன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments