Breaking News

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

கோவை, ஜூன் 22-

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்;              மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட திவான்பகதூர் சாலை, காந்தி பூங்கா, லாலி ரோடு ஆகிய பகுதிகளில்; மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேற்று (21.06.2022) நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், திவான்பகதூர் சாலை ரவுண்டானாவில் போக்குவரத்து சிக்னல் அமைப்பதற்கான பணிகளையும், மாநகராட்சி மல்டி லெவல் கார் பார்க்கிங்கின் செயல்பாடுகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து, வார்டு எண்.72-க்குட்பட்ட காந்தி பூங்காவினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பூங்காவினை புனரமைத்திடவும், சிறப்பாக பராமரித்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அப்பூங்காவிலுள்ள கழிவறையை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்திட ஏதுவாக தூய்மையாக பராமரித்திட சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, லாலிரோடு பகுதியிலுள்ள நியாய விலைக்கடையில் நேரில் ஆய்வு செய்து, அங்குள்ள பொதுமக்களிடம் பொருட்கள் தரமானதாக உள்ளதா எனவும், எத்தனை வகையான பொருட்கள் வாங்குகிறீர்கள் எனவும், பின்னர், அதே பகுதியில் வணிகவளாகத்தில் உள்ள ஒரு கடையின் உரிமையாளரிடம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தியுள்ளீர்களா எனவும் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையர் சரவணன், காவல்துறை உதவி ஆணையர் (போக்குவரத்து)  சிற்றரசு, உதவி செயற்பெரியாளர்  ஹேமலதா, உதவி பெரியாளர்கள்  குமரேசன்,  கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.  

No comments

Thank you for your comments