Breaking News

காெரானா விழிப்புணர்வு ஊழியர்களுக்கு ஆறு மாதமாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காெரானா விழிப்புணர்வுக்காக டிபிசி பணிக்காக சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணிக்கு நியமனம் செய்தனர். ஆனால் ஆறு மாதங்களாக இதுவரை சம்பளம் வழங்வில்லை என்று புகார் எழுந்துள்ளது. 

சம்பளம் கொடுக்காமலே இந்த பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டதாகவும் புகார் எழுகிறது இவர்களது குடும்பத்தில்  தினம்தினம் சண்டைகளும பிரச்சனைகளும் நடந்து வருவதால் தாங்கள் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்று 500க்கும் மேற்பட்ட டிபிசி ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

அதுமட்டுமல்லாமல் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மையம் இயங்கி வருகிறது இந்த மையம் செப்டம்பர் மாதம் முதல் தனியாக ஒரு இடத்தில் செய்யப்பட்டு வருகிறது. அங்கு ஒரு ஆட்களை நியமனம் செய்து உள்ளனர். ஆனால் இதுவரை அந்த அறையில் கணினி இயங்கவில்லை, புகார் எண் தொலை பேசி சரியாக வேலை செய்யவில்லை வாரத்தில் இரண்டு நாள் மட்டுமே வேலை செய்வதாக பொதுமக்கள் தொடர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனால் உடனடியாக இதை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் துணை மேயர் ஆணையர் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு தனியாக அறை இருந்தாலும் இவர்கள் இதனை கண்டு கொள்ளாதது மனவேதனை அளிக்கின்றது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் 

இங்கு வேலை செய்யும் ஆட்களுக்கு பணி ஆணை கூட வழங்கவில்லை என்று தெரிகிறது..

ஆய்வு செய்தால் உண்மை வெளிச்சத்திற்க்கு வரும்...

செய்வார்களா பொருத்திருந்து பார்ப்போம்...

No comments

Thank you for your comments