சுகாதாரத்தை மறந்து சுணக்கமாக செயல்படும் ஆவடி மாநகராட்சி... பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
ஆவடி:
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் அதிகமாக சாலைகளில் உலா வந்து கொண்டிருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், விபத்துகள் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர். மேலும் ஆவடி மாநகராட்சி கால்நடைகளை வளர்க்கிறதா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். நடவடிக்கை எடுக்கவேண்டிய மாநகராட்சி மெத்தனமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்பொழுது ஆவடி மாநகராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளதால் குப்பைகளை சரிவர அகற்றுவதில்லை.. இதனால் ஆங்காங்கே சாலையில் குப்பை குவியலாக காட்சி அளிக்கின்றன.
இதனால் குப்பை உணவுகளை உண்ண மாடுகள் அணி திரண்டு குப்பைகளை சாலையில் பரப்புகின்றன.
அதுமட்டுமின்றி சாலைகள் முழுவதும் மாடுகள் உலாவருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள குப்பைகளாலும், மாடுகளாலும் தடுமாறி கிழே விழுவதும், தொடர்ந்து விபத்துகள் நடைபெறுவதுமாக உள்ளது.
மாடுகள் தொல்லை ஒருபுறம் என்றால், குப்பகளால் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்புகளில் தொற்று பரவும் அபாயமும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
தற்பொழுது பெய்துவரும் மழையாலும், வரும் காலம் மழைகாலம் என்பதாலும் பொதுமக்கள் டெங்கு போன்ற நோய்கள் பாதித்துவிடுமோ என்ற அச்சத்தில் பயந்துள்ளனர் என்றால் மிகையாகாது. கொசுக்களும் அப்பகுதியில் அதிகரித்துவருகின்றன...
சொத்துவரி, குழாய்வரி என்று அனைத்திற்கும் வரியை தவறாமல் வசூல் செய்யும் மாநகராட்சி, பொதுமக்களுக்கு சுகாதாரத்தை வழங்குவதில் மட்டும் ஏன் இந்த சுணக்கம் என்ற கேள்வி எழுப்புகின்றனர்...
குப்பகளை அகற்றி முறையாக சாலைகளை பராமரித்து சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும்.... பொதுமக்கள் புகார் கொடுத்தாலும் மெத்தனமாக செயல்படும் போக்கை கைவிடவேண்டும் என்று பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மாநகராட்சி மீது வைக்கின்றனர்.
பொதுமக்களின் குறைகளுக்கு செவிமடுத்து, மாநகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா...? இல்லை வழக்கம் போல் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றுதான் செயல்படுவார்களா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்...
No comments
Thank you for your comments