பள்ளி செல்லும் சிறார்களுக்கு பகுதி நேரக்கலைப் பயிற்சி வகுப்புகள்
கோவை, ஜூன் 14-
தமிழக அரசின் சார்பில் பள்ளி செல்லும் சிறார்களுக்கு பகுதி நேரக்கலைப் பயிற்சி வகுப்புகள் கோயம்புத்தூரில் தொடங்குகிறது மாவட்டஆட்சித்தலைவர். டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுகலை பண்பாட்டுத்துறை கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் பள்ளி செல்லும் மாணவ மாணவியர் கலைகளை பயிலும் வண்ணம் பகுதிநேர கலைப் பயிற்சியினை அளித்து வருகிறது. கோயம்புத்தூர், செட்டிபாளையம் சாலை, மலுமிச்சாம்பட்டி, அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது.
இம்மன்றத்தில் குரலிசை (வாய்பாட்டு), பரதநாட்டியம், ஓவியம், யோகா ஆகிய கலைகளில் சனிக்கிழமை மதியம் 3.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் ஞாயிறு காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் இப்பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சிறுவர் மன்ற உறுப்பினராக பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தாவாக ரூ.300/- செலுத்தப்படவேண்டும். சூன் 18அன்று தொடங்கும் பயிற்சிகள் 2023 மார்ச் மாதம் இறுதிவரை நடைபெறும்.
இம்மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி பெறும் சிறார்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறை பயிலரங்கம் ஆகியவைகளில் கலந்துக் கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும்.
சூன் 18 சனிக்கிழமை முதல் பயிற்சி வகுப்புகள் கோயம்புத்தூர், செட்டிபாளையம் சாலை, மலுமிச்சாம்பட்டி, அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் தொடங்கபட உள்ளது. பதிவு மற்றும் மேலும் விவரம் வேண்டுவோர் கோயம்புத்தூர் ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை 9751528188 என்ற எண்ணிலோ தொடர்புக் கொள்ளலாம் என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜிஎஸ்சமீரன் தெரிவித்துள்ளார்.
*****
அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், கோயம்புத்தூர் மாநகராட்சி இராமநாதபுரம் துவக்கப்பள்ளியில் மாணவ&மாணவியர்களுக்கு புத்தகங்கள் வழங்கி நேற்று (13-06-2022) வரவேற்றார்.


No comments
Thank you for your comments