Breaking News

நன்னடத்தை பிணையை மீறிய சரித்திரப்பதிவேடு குற்றவாளிக்கு 230 நாட்கள் சிறை

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். 



இதன்படி காஞ்சி தாலுக்கா காவல்நிலைய ஆய்வாளர் அவரின் பரிந்துரையின்பேரில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப்பதிவேடு குற்றவாளியான பாரத் ( 19 ) த /பெ.அண்ணாதுரை, முருகன், கோயில் தெரு, குருவிமலை, வாலராஜாபாத் தாலுக்கா என்பவரை சட்டப்பிரிவு 110   குவிமுச - வின் படி ஒரு ஆண்டிற்கு நன்னடத்தை பிணையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் ஆணை பிறப்பித்தார் .



இந்நிலையில் மேற்படி, பாரத் (19)  த / பெ.அண்ணாதுரை நன்னடத்தை பிணையை மீறி 05.06.22 அன்று எம்.ஜி.ஆர் நகர், ஒரிக்கையை சேர்ந்த ரஞ்ஜித் ( 22 ) என்பவரின் வீட்டில் கொள்ளையடித்தது சம்பந்தமாக 06.06.22 அன்று காஞ்சி தாலுக்கா காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். 



எனவே , மேற்படி நபர் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக பாரத் ( 19 ) த/ பெ.அண்ணாதுரை - யை 230 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டார். 



இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காஞ்சி தாலுக்கா காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

No comments

Thank you for your comments