உலக வளர்ச்சிக்கான நம்பிக்கைக் கீற்றாக மாறி வருகின்றன மேக் இன் இந்தியா - பிரதமர் மோடி
"இயற்கைக்கு அறிவியலைப் பயன்படுத்துவது மற்றும் ஆன்மீகத்துடன் தொழில்நுட்பத்தை இணைப்பது எழுச்சிமிகு இந்தியாவின் ஆன்மா", “இன்று உலகம் நமது ஸ்டார்ட்அப்களை அதன் எதிர்காலமாக பார்க்கிறது. நமது தொழில்துறையும், 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியும் உலக வளர்ச்சிக்கான நம்பிக்கைக் கீற்றாக மாறி வருகின்றன’’ என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமி ஜியின் 80வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிச் செய்தி மூலம் உரையாற்றினார்.
இந்த புனிதமான தருணத்தில் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் அவரது சீடர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். புனிதர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் ‘ஹனுமத் துவார்’ நுழைவு வளைவை அர்ப்பணிக்கப்பட்டதையும் திரு மோடி குறிப்பிட்டார்.
புனித நூல்களை மேற்கோள் காட்டி, ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமி ஜியின் வாழ்க்கை, மனித குலத்தின் நலனுக்காகத் துறவிகள் உருவானார்கள் என்பதற்கும், அவர்களின் வாழ்க்கை சமூக மேம்பாடு மற்றும் மனித நலனுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதற்கும் ஒரு வாழும் உதாரணம் என்று பிரதமர் கூறினார். தத்த பீடத்தில் ஆன்மிகத்துடன் நவீனத்துவமும் வளர்க்கப்படுவதாக பிரதமர் திருப்தி தெரிவித்தார்.
3டி மேப்பிங் மற்றும் ஒளி ஒலி காட்சி மற்றும் நவீன நிர்வாகத்துடன் கூடிய பறவை பூங்கா ஆகியவற்றைக் கொண்ட பிரமாண்ட ஹனுமான் கோவிலை அவர் சுட்டிக்காட்டினார். வேதங்களின் சிறந்த ஆய்வு மையமாக மட்டுமல்லாமல், ஆரோக்கிய நோக்கங்களுக்காக இசையைப் பயன்படுத்துவதில் தத்த பீடம் தாக்கம் மிக்க புதுமைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
“இயற்கைக்கான அறிவியலைப் பயன்படுத்துவது, ஆன்மீகத்துடன் தொழில்நுட்பத்தின் இந்த ஒருங்கிணைப்பு எழுச்சிமிக்க இந்தியாவின் ஆன்மா. சுவாமிஜி போன்ற துறவிகளின் முயற்சியால், இன்று நாட்டின் இளைஞர்கள் தங்கள் மரபுகளின் ஆற்றலைப் பற்றி அறிந்து கொண்டு அவற்றை முன்னெடுத்துச் செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று திரு மோடி கூறினார்.
விடுதலையின் அமிர்தப்பெருவிழா காலத்தில் வரும் மங்களகரமான சந்தர்ப்பத்தின் பின்னணியில், உலகளாவியதாக கருதுவதற்கான புனிதர்களின் போதனைகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். “சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ்” என்ற மந்திரத்துடன், நாடு கூட்டு உறுதிமொழிகளுக்கு அழைப்பு விடுக்கிறது.
இன்று நாடு அதன் தொன்மையைப் பாதுகாத்து, அதை ஊக்குவித்து, அதே நேரத்தில், அதன் புதுமை மற்றும் நவீனத்துவத்திற்கு பலம் அளிக்கிறது. “இன்று இந்தியாவின் அடையாளம் யோகா மற்றும் இளைஞர்கள். இன்று உலகம் நமது ஸ்டார்ட்அப்களை தனது எதிர்காலமாக பார்க்கிறது.
நமது தொழில்துறையும், 'மேக் இன் இந்தியா'வும் உலக வளர்ச்சிக்கான நம்பிக்கைக் கீற்றாக மாறி வருகின்றன. இந்த உறுதிப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு நாம் உழைக்க வேண்டும். நமது ஆன்மீக மையங்கள் இந்த திசையிலும் உத்வேகத்தின் மையங்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’’ என பிரதமர் மேலும் கூறினார்.
இயற்கை பாதுகாப்பு மற்றும் பறவைகளின் சேவையில் அவர்கள் ஆற்றிய பணியை குறிப்பிட்டு, தண்ணீர் மற்றும் நதிகளை பாதுகாப்பதில் தத்த பீடம் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகளுக்கான பிரச்சாரத்தில் தங்கள் பங்களிப்பை அவர் வலியுறுத்தினார். தூய்மை இந்தியா இயக்கத்தில் பீடத்தின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.
No comments
Thank you for your comments