Breaking News

தமிழ்நாடு நுகர்பொருள் மற்றும் வாணிப கழகம் சார்பில் ஆலை உரிமையாளர்களுடன் ஆய்வுக்கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் மற்றும் வாணிப கழகம் சார்பில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட அரிசி அரவை ஆலை உரிமையாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் மற்றும் வாணிப கழகம் சார்பில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட அரிசி அரவை ஆலை உரிமையாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் 18.05.2022 அன்று நடைபெற்றது.


இக்கூட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் எடுத்தல் மற்றும் அரிசி ஒப்படைக்கும் இடத்தில் கால தாமதம் ஆவதால் போக்குவரத்து வாகனங்களின் செலவு பெருமளவு பாதிக்கப்படுவதாகவும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தரமான நெல்களை அரசு அலுவலர்கள் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அரவை முகவர்கள் தெரிவித்ததற்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலருடன் இணைந்து வாகன பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் அரவைக் கட்டணம் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்தார்கள்.

மேலும் தற்சமயம் ஒரு சில அரவை முகவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நெல் எடுக்காமல் உள்ளவர்கள் நெல் எடுத்து அரைக்குமாறும், மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் அரவை முகவர்களாக செயல்பட்டு இம்மாவட்டத்தில் விளைந்த நெல்லினை இம்மாவட்ட முகவர்கள் மூலம் அரைத்து பொது விநியோகத் திட்டத்திற்கு பயன்படுத்துவதுடன் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு முழுமையாக பயன்பெற ஒத்துழைப்பு நல்குமாறு அரிசி அரவை ஆலை உரிமையாளர்களை கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இணை நிர்வாக இயக்குநர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவ ருத்ரய்யா, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட தனியார் அரவை முகவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments