Breaking News

2024 மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக வெல்லும்.. உறுதியேற்ற உதயநிதி ஸ்டாலின்..

ஓசூர் :

2024 மக்களவைத் தேர்தலில் திமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏயுமான  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதாக நேற்று ஓசூர் சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று காலை திமுக கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நலிந்த கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, திமுக மூத்த நிர்வாகிகளுக்கு அவர்கள் ஆற்றிய  பணிகளை கவுரவிக்கும் விதமாக ஓசூரில் 600 பேருக்கு  பொற்கிழி வழங்கினார். மேலும் இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாவது,   'இனி நான் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கு முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நிச்சயம் இடம்பெறும்' என அறிவித்தார்.



மேலும், இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 2024 யில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் திமுக 40 இடங்களிலும் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

இதனைதொடர்ந்து ஓசூரில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலின், இளைஞர்கள், மாணவர்களுக்கு வேலை உத்தரவு ஆணையை வழங்கினார்.இதில் தமிழ்நாடு கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்


 

No comments

Thank you for your comments