Breaking News

"அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் வீடு வாங்க விண்ணப்பிக்கலாம்...

வேலூர்:

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், வேலூர் கோட்டம் மூலம்  PMAY(U)-HFA-AHP  - "அனைவருக்கும் வீடு"  திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தில் வேலூர் மாவட்டம், குளவிமேடு, டோபிகானா பகுதி-I & II, கன்னிகாபுரம் ஆகிய திட்டப்பகுதிகளில் (G+3) 704 குடியிருப்புகள் முடிக்கப்பட்டுள்ளன. 

கரிகிரி, தொரப்பாடி, பத்தலபல்லி ஆகிய திட்டப்பகுதிகளில்  (G+3) 864  குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 590 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. மீதம் உள்ள 114 குடியிருப்புகள் மற்றும் தற்போது பணிகள் நடைபெற்று வரும் 864 குடியிருப்புகள் சேர்த்து மொத்தம் 978 குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது. 

இத்திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய  மற்றும் மாநில அரசின் மானியத் தொகை போக மீதமுள்ள பயனாளிகளின் பங்குத்தொகையான குளவிமேடு திட்டப்பகுதிக்கு ரூ.1,80,000/-, டோபிகானா பகுதி -I ற்க்கு ரூ.1,85,000/-, டோபிகானா பகுதி -II ற்க்கு ரூ.1,44,000/-, கன்னிகாபுரம் திட்டப்பகுதிக்கு ரூ.1,82,616/-, கரிகிரி திட்டப்பகுதிக்கு ரூ.1,55,000/-, தொரப்பாடி திட்டப்பகுதிக்கு ரூ.2,38,000/-, பத்தலபல்லி திட்டப்பகுதிக்கு ரூ.1,53,000/- பயனாளிகள் செலுத்த வேண்டும். 

மேலும்  "அனைவருக்கும் வீடு" திட்ட விதிகளின்படி, மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இத்திட்டப்பகுதிகளில் குடியிருப்பு தேவைப்படுவோர், கீழ்க்கண்டவாறு சான்றளிக்க வேண்டும். 

1. இந்தியாவில் எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ மனையோ, வீடோ இல்லை என்றும் எனது மாத வருமானம் ரூ.25,000/- கீழ் உள்ள என்றும் உறுதியளிக்க வேண்டும்.

பயனடைய விரும்பும் பயனாளிகள் குடும்பத் தலைவர் மற்றும் குடும்பத்தலைவி ஆகிய இருவருடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும் மற்றும் பத்தலபல்லி திட்டப்பகுதிக்கு வட்டாட்சியர் அலுவலகம், பேர்ணாம்பட்டு 05.05.2022 அன்று நடைபெற இருக்கும் முகாமில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனு அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்

செய்தி வெளியீட்டு எண். 158 /   நாள்.21.04.2022


No comments

Thank you for your comments