Breaking News

காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு...

காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் கோடை காலத்தை ஒட்டி சங்கத் தலைவர் முருகேசஷ் தலைமையில் குடிநீர் பந்தல் திறக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் சங்கரமடம் பின் புறம் காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் கோடைக்காலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் பந்தல் திறக்கப்பட்டது.  



இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல்  செல்வம் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குடிநீர் பந்தலினை திறந்து வைத்து பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் நீர்மோர் உள்ளிட்ட பழ வகைகளை வழங்கினார். 

இதில் வருங்கால கவர்னர் ரோட்டரி பரணிதரன். சங்கத்தின் செயலாளர் பொருளாளர் உறுப்பினர்கள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.






No comments

Thank you for your comments