Breaking News

மர்மமான முறையில் இறந்து கிடந்த தெருநாய்கள்

காஞ்சிபுரம், ஏப்.3-

காஞ்சிபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் மர்மமான முறையில் தெருநாய்கள் இறந்து கிடந்ததால் அப்பகுதியிலுள்ள குடியிருப்புவாசிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் சாலையில் அமைந்துள்ளது அய்யன் திருவள்ளுவர் நகர் மற்றும் சுவர்ணா நகர். காஞ்சிபுரத்தின்  புறநகரில் அதிவேகமாக குடியிருப்புகள் கட்டப்படும் பகுதியாக இப்பகுதி உள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல் குடியிருப்புகளை சுற்றி அப்பகுதியில் இருந்த தெருநாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைப் பார்த்து குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அப்பகுதியில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட நாய்களை காணவில்லை எனவும் இதுகுறித்து காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காஞ்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதில் குறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில் , இப்பகுதியில் அனைத்து வீடுகளிலும் வளர்ப்பு நாய் மட்டுமல்லாமல் தெரு நாய்களையும் அன்புடன் பாசத்துடன் வளர்த்து வந்ததாகவும் , தங்களுக்கு பாதுகாப்பாக விளங்கிய இதனை மர்ம நபர்கள் உணவில் விஷம் வைத்து கொன்று உள்ளதாகவே தோன்றுகிறது எனவும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments