சாலை வசதி, குடிநீர் வசதி கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அடுத்த ஒரங்கூர் ஊராட்சியை சேர்ந்த ராயர்பாளையம் கிராமம் உள்ளது இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்நிலையில் இங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலையோரத்தில் பள்ளம் தோன்டியுள்ளனர்... அதில் அந்த கிராமத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.. அதன்பிறகு குடிநீர் குழாய்கள் சரி செய்யாமலும் சாலை பணியும் நடைபெறாமலும் உள்ளதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் நீண்ட தூரம் சென்று குடிநீர் கொண்டு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் கிராம மக்கள் சாலை பணி நடைபெறாததால் இப்பகுதியில் இருந்து பள்ளி கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி உடனடியாக சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டி காலி குடங்களுடன் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments