முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துமனையில் அனுமதி- நலம் விசாரித்த முதலமைச்சர்
சென்னை:
சட்டசபை நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் சபாநாயகர் தனபாலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அ.தி.மு.க., அமைச்சரவையில் சபாநாயகராக இருந்தவர் தனபால். கடந்த சட்டசபை தேர்தலில் அவினாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
கடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசினார்.
இந்த நிலையில் தற்போது சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் தனபால் பங்கேற்று வருகிறார். 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர்கள் தனபால் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்.
முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது.
சட்டசபை நிகழ்வில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் அங்கிருந்து தனபாலுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அவரது உடல்நலம் நன்றாக இருப்பதாகவும் சாதாரண பரிசோதனை மட்டும் மேற்கொண்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments
Thank you for your comments