சான்றிதழை தருமாறு ஆசிரியரிடம் கெஞ்சும் மாணவன்... வி(மி)ரட்டும் ஆசிரியர்...
விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், படிப்பை முடித்து விட்டு சென்ற மாணவன் தனது சான்றிதழை தருமாறு, ஆசிரியரிடம் மாணவன் நடத்தும் வாக்குவாதத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் உள்ளூர் மற்றும் வெளியூர் கிராமப் பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சென்ற மாணவன், தனக்கு உண்டான சான்றிதழை வழங்குமாறு, அப்பள்ளியில் லேப் டெக்னீசியனாக உள்ள ஆசிரியர் ஷாஜகான் என்பவரிடம் கேட்டுள்ளார்.
அப்போது மாணவன் தனது சான்றிதழை வழங்க, நேற்று ? இன்று? என ஏன் அலைகழிப்பு செய்து வருகிறீர்கள் என்று கேட்ட போது?....
ஒரு வாரம், ஒரு மாதம் ஆனாலும் கொடுக்க மாட்டோம் என்று அதட்டும் தோனியில் ஆசிரியர் பதில் கூறுகிறார்.
பின்னர் ஆசிரியர் ஷாஜகான், விருத்தாசலம் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் சென்று புகார் அளித்து கொள் என்றும், வேண்டுமென்றால் அதிகாரிகளின் மொபைல் நம்பர் தருகிறேன் புகார் அளித்துகொள் என்றும் தெரிவிக்கிறார்.
பாதிக்கப்பட்ட மாணவன், தனது சான்றிதழை வழங்காமல் அலைகழிப்பதாகவும், படித்த மாணவனுக்கு மரியாதை கூட தரமாட்டீர்கள் என்று புலம்புகிறார்.
பின்னர் மரியாதை எல்லாம் தர முடியாது என்றும், உன்னைப்போல் 50 மாணவர்கள் போய் விட்டார்கள் என்றும், போய்ட்டு வா என்று ஆசிரியர் கூறுகிறார்.
இதுகுறித்து சான்றிதழ் கேட்டு வந்த மாணவன், தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, வெளியிட்டதால், அவ்வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா....? பாதிக்கப்பட்ட மாணவர்கள் எதிர்பார்ப்பு....?

No comments
Thank you for your comments