Breaking News

ஆவடி இந்திய விமானப் படை சார்பில் இலவச மருத்துவ முகாம்

ஆவடி இந்திய விமானப் படை சார்பில் இலவச மருத்துவ முகாம் ஆவடி அடுத்த மோரை கிராமத்தில்  நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள இந்திய விமான படை சார்பில் இலவச மருத்துவ முகாம் ஆவடி அடுத்த மோரை, ஜெ.ஜெ. நகரில் நடைபெற்றது. முகாமை இந்திய விமானப்படையின்  ஏர் கமாண்டர் சிவகுமார் தொடங்கி வைத்தார். 

இதில் விமான படை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் ஏழை எளிய பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண், பல் பரிசோதனை, பொது மருத்துவம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இதன் பின்னர்  கமாண்டர் சிவக்குமார் நடந்தே சென்று அப்பகுதி மக்களிடம் தேவையான அடிப்படைப் பிரச்சனைகளை கேட்டறிந்தார். விரைவில் அதனை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதில் விமானப்படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இந்திய விமானப்படை குரூப் கேப்டன் பொற்செழியன், மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் உள்பட விமானப்படை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments