Breaking News

அங்கம்பாக்கம் பள்ளியில் நிழல் இல்லா தினம்...

காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் நடுநிலைப்பள்ளியில்  ஏப்ரல் 24 நடைபெற்ற முக்கிய வானியல் நிகழ்வான நிழல் இல்லா தினம் குறித்த செயல்பாடுகள் நடைபெற்றது.  

இந்நிகழ்வானது ஆண்டுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும். சூரியன் அனைத்து நாட்களும் சரியாக கிழக்கில் தெரிவதில்லை. தென்கிழக்கில் தோன்றி வடக்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து மீண்டும் வடகிழக்கு திசைக்கு திரும்பும்.


இந்நிகழ்வு உத்திராயனம்,  தட்சிணாயனம் என கூறப்படுகிறது. 

உத்திராயனம் தட்சிணாயனம் நிகழ்வு மாறிமாறி நிகழும்போது ஆண்டுக்கு இரண்டு நாட்கள் மட்டும் சூரியன் சரியாக கிழக்கில் தோன்றுவதோடு நண்பகலில் சரியாக பூமியின் உச்சியில் தெரியும். அவ்வேளையில் செங்குத்தாக நிற்கும் எந்த பொருளின் நிழலும் தரையில் விழாமல் அப்பொருளின் மீதே விழும். இந்நிகழ்வே நிழலில்லா தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

ஏப்ரல் 24 அன்று நிகழ்ந்த இந்த அரிய வானியல் நிகழ்வுகுறித்து அங்கம்பாக்கம் பள்ளியின் சார்லஸ் டார்வின் அறிவியல் கழகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உரிய உபகரணங்களைக் செயல்பாடுகள் மூலம்  மாணவர்களுக்கு விளக்கிக்கூறப்பட்டது.

தலைமையாசிரியர் தணிகைஅரசு வகித்தார். இந்நிகழ்விற்கு  அறிவியல் ஆசிரியர் ஒருங்கிணைத்திருந்தார். காஞ்சிபுரம் ஒன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலர் கண்ணன் அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு இந்நிகழ்வு குறித்த மேலும் சில அரிய செய்திகளை எடுத்துக்கூறினார். 



இந்நிகழ்வுகுறித்து விக்யான் பிரசார் , அறிவியல் பலகை, மற்றும் உடுமலைப்பேட்டை கலிலியோ அறிவியல் கழகம் சென்ற வாரம் நடத்திய பயிற்சிப்பட்டறையில் பங்கேற்ற பள்ளியின் மாணவ- மாணவிகள் கிருத்திகா, தேசிகா, நித்தீஷ்வர், அரிணி, நித்தியபவி ஆகியோர் இந்நிகழ்வுகுறித்து பிற மாணவர்களுக்கு செய்துக்காட்டி விளக்கிக்கூறினர். இறுதியில் பள்ளி ஆசிரியர் சீனுவாசன் நன்றி கூறினார்...

No comments

Thank you for your comments