வரலாற்றுச் சிறப்புமிக்க வருடாந்திர சாதனையை படைத்துள்ளது இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை
புதுடெல்லி:
நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மிகப்பெரிய கடன் வழங்குநரான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐரெடா), 2021-22 நிதியாண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க வருடாந்திர சாதனையை படைத்துள்ளது.
இதுவரை இல்லாத அளவில் சுமார் ரூ 23921.06 கோடி மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல் அளித்து, ரூ 16070.82 கோடி கடனை வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ், ஊக்கமூட்டும் வகையில் அனைத்து ஊழியர்களிடமும் உரையாற்றினார்.
"உலகளாவிய பதட்டமான சூழ்நிலைகளுடன், கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளை கடந்த ஆண்டு கண்ட போதிலும், 2021-22-ல் முக்கிய மைல்கற்களை ஐரெடா எட்டியுள்ளது. மாண்புமிகு பிரதமரின் பஞ்சமித்ரா காப் 26 இலக்குகளை அடைவதில் ஐரெடா முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் நாட்டின் எரிசக்தித் தேவைகளில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் எட்டுவது மற்றும் இந்தியாவின் புதைப்படிவ எரிபொருள் அடிப்படையிலான எரிசக்தித் திறனை 500 ஜிகாவாட் ஆக உயர்த்துவதும் இதில் அடங்கும்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் 2022 பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட உயர் திறன் கொண்ட சூரிய மின் தொகுதிகள் உற்பத்தியாளர்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்காக ரூ 19,500 கோடி கூடுதல் ஒதுக்கீடு செய்வதற்கு நிறுவனம் தயாராக உள்ளது,” என்றார்.
2021-22 நிதியாண்டில் ஐரெடாவின் செயல்பாடுகளின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
* கடன் ஒப்புதல்கள்: இதுவரை இல்லாத அதிகபட்ச ரூ 23,921 கோடி. 2020-21 நிதியாண்டில் ரூ 11,001 கோடியாக இருந்த நிலையில் 117% அதிகரிப்பு
* கடன் வழங்கல்கள்: இதுவரை இல்லாத அளவுக்கு ரூ 16,071 கோடி. 2020-21 நிதியாண்டில் ரூ 8,827 கோடியாக இருந்த நிலையில் 82% அதிகம்.
செயல்படாத சொத்துகள்: 2020-21 நிதியாண்டில் 5.61% ஆக இருந்த நிகர செயல்படாத சொத்துகள் 2021-22 நிதியாண்டில் 3.29% ஆகக் குறைக்கப்பட்டது (தோராயமாக 41% குறைப்பு).
நிகர மதிப்பு: 2021-22 நிதியாண்டின் முடிவில் ரூ. 4,989 கோடி ஆக அதிகரிப்பு. 2020-21 நிதியாண்டிம் முடிவில் ரூ 2,995 கோடி (67% அதிகரிப்பு).
கடன் புத்தகம்: 2021-22 நிதியாண்டின் முடிவில் ரூ 34,000 கோடி. 2020-21 நிதியாண்டின் முடிவில் ரூ 27,854 கோடி (சுமார் 22% அதிகம்).
No comments
Thank you for your comments