Breaking News

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 நபர்கள் கைது...6.800 கிலோ கஞ்சா பறிமுதல்...

கோவை:

கோவை மாவட்டத்தில் 6.800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையாக  கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 நபர்கள் கைது செய்தனர்.  

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இ.கா.ப., உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில்....

பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர்  அனந்தநாயகி  சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெஷன்ட் நாத் என்பவரது மகன் பிரசாந்குமார் நாத்(36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 4.200 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

கந்தே கவுண்டன் சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான திருமலையம்பாளையம் பகுதியில் உதவி ஆய்வாளர் சரவணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த  மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரது மகன் பிரபாகர் (26)மற்றும் வேலுச்சாமி என்பவரது மகன் அஜித்குமார் (25) ஆகிய இருவரையும்  கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம்-1ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.

காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர்  குமார்  சம்பவ இடமான தாயனூர் மணல் புதூர் பகுதிக்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சிவசக்திவேல் (21), கருப்புசாமி(21),காரமடை பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (21)  கார்த்திகேயன் (20), கிரண்குமார் (23)மற்றும் கார்த்தி (25)ஆகிய 6 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1.500 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம்-2 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து சுமார் 6.800 எடையுள்ள கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம்-3 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து, பறிமுதல் செய்த காவல்துறையினரை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.*

இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவிக்க தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்..

No comments

Thank you for your comments