Breaking News

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3000 கன அடியாக உயர்வு

பென்னாகரம், ஏப்.19-

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது

பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் இருதினம் முன் அளவீட்டின்போது விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி என்ற அளவில் நீர்வரத்து பதிவானது. 

இந்த நிலையில் நேற்று நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தை நோக்கி வரும் காவிரியாறு அமைந்துள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் நீர் முழுவதும் காவிரியில் சேருகிறது. காவிரியாற்றில் ஏற்கனவே வந்து கொண்டிருக்கும் மிக குறைந்த அளவு நீருடன் இந்த மழை நீரும் சேர்வதால் ஒகேனக்கல் பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  நேற்று  முன்தினம் காலை அளவீட்டின் போது வினாடிக்கு 3000 கனஅடி என்ற அளவில் நீர்வரத்து அதிகரித்திருந்தது. நேற்று காலையிலும் இதே அளவு நீர்வரத்துடன் காவிரியாற்றில் தண்ணீர் வருகிறது.


No comments

Thank you for your comments