Breaking News

29.04.2022 அன்று காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்:

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து 29.04.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.   

இம்முகாமில் தனியார்  நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர்.  



அதுசமயம் பட்டதாரிகள், (B.E. உட்பட), டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ஆம் வகுப்பு படித்தவர்கள், வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 29.04.2022 அன்று காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுகவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments