மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு
காஞ்சிபுரம்
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தததால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராமம் தர்மறாய்க்கன் பட்டரை பகுதியில் சுமார் 80 குடும்பாங்கள் 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மின்சார வாரியம் மின் இணைப்பு குடும்ப அட்டை ஆதார் அடையாள அட்டை சாலை வசதி குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் பெற்று வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து அந்த இடத்தை காலி செய்யும்படி நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் ஏனென்று கேட்டால் இது நீர்நிலை என்று கூறுகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த மக்கள் கூறிவதாது,
எங்கள் பகுதியில் சுமார் ஆயிரம் மீட்டர் தொலைவு உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் என்பது குடும்பங்களுக்கு அரசு வழங்கியுள்ளது. மேற்பகுதியில் உள்ள எங்கள் பகுதியை நீர்ப்பிடிப்பு என்று கூறுகின்றனர். எங்களுக்கு இந்த இடத்தை தவிர வேறு எந்த சொத்தும் இல்லை.
இந்த இடத்தில் இருந்து எங்களை வெளியேற்றினால் நாங்கள் குடும்பத்துடன் வீதியில் இருக்கிறதே தவிர வேறு வழியில்லை என்று அப்பகுதி கிராம மக்கள் தலைவர் சீதை அம்மாள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்டோர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்க வந்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் இல்லாததால் டிஆர்ஓ சிவ ருத்ரய்யா இடம் தங்கள் குறைகளை மனுவாக கொடுத்தனர். பின்பு அவர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் அதை தொடர்ந்து அவர்கள் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்
.jpg)

.jpg)
No comments
Thank you for your comments