Live - Cabinet Approves : மத்திய அமைச்சரவை முக்கிய ஒப்புதல்கள் - தொகுப்பு
சுரங்கங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்ள ஒப்புதல்
சில வகை தாதுப்பொருட்களுக்கான ராயல்டி தொகையை நிர்ணயிக்க, சுரங்கங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1957-ல் 2-வது அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், க்ளூக்கோநைட், பொட்டாஷ், எமரால்டு, பிளாட்டினம் வகை உலோகங்கள், அன்டாலுசைட், சிலிமனைட் மற்றும் மாலிப்டினம் போன்ற தாதுப்பொருட்களுக்கான ராயல்டி தொகையை நிர்ணயிக்க ஏதுவாக, சுரங்கங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1957-ல் 2-வது அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட தாதுப்பொருள் சுரங்கங்கள் ஏலத்தில் விடப்படுவதை உறுதி செய்வதோடு அவற்றின் இறக்குமதியையும் கணிசமாக குறைப்பதுடன், சுரங்கத்துறையில் அதிகாரமளித்தலுக்கான வாய்ப்புகளையும் இந்த அனுமதி உறுதி செய்யும். மேலும் சமுதாயத்தின் பெரும்பாலானோரின் உள்ளார்ந்த வளர்ச்சியை உறுதி செய்யவும் இது உதவும். இறக்குமதி குறைக்கப்படுவதுடன் அந்நியச் செலாவணியை சேமிக்கவும் இந்த அனுமதி வகை செய்யும்
👀👀 ⚘ 👀👀
ஐசிஎம்ஆர்- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் நவம்பர் 2021-ல் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் திறன் மேம்பாடு, புள்ளிவிவர சேகரிப்பு போன்றவற்றுடன் திறன் மேம்பாட்டுக்கான மண்டல மையமாக இந்தியாவை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். பூச்சிகளால் பரவக் கூடிய மூன்று முக்கிய நோய்கள் (மலேரியா, ஒட்டுண்ணிகளால் ஏற்படக் கூடிய கருங்காய்ச்சல், யானைக்கால்) பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
👀👀 ⚘ 👀👀
தேசிய நில பணமாக்கல் கழகத்தை ஏற்படுத்த ஒப்புதல்
உபரி நிலங்களைப் பணமாக்குவதற்காக சிறப்பு ஏற்பாடாக தேசிய நில பணமாக்கல் கழகத்தை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உபரி நிலங்களைப் பணமாக்குவதற்காக சிறப்பு ஏற்பாடாக, முற்றிலும் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாக தேசிய நில பணமாக்கல் கழகத்தை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தக் கழகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட தொடக்க பங்கு மூலதனமாக ரூ.5,000 கோடியும், பெறப்படும் தொகையிலிருந்து ரூ.150 கோடி பங்கு மூலதனத்தையும் கொண்டதாக இருக்கும். மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு அமைப்புகளுக்குச் சொந்தமான உபரி நிலம் மற்றும் கட்டட சொத்துக்களை பணமாக்கும் பணியை இந்தக் கழகம் மேற்கொள்ளும்.
2021-22 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பயன்படுத்தப்படாத மற்றும் குறைவான பயன்பாடு கொண்ட முக்கியமற்ற சொத்துக்களை பணமாக்குவதன் மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்.
மத்திய நிதியமைச்சகத்தின் பொது நிறுவனங்கள் துறை இந்தக் கழகத்தை உருவாக்கி, அதன் நிர்வாகம் அமைச்சகமாகவும், செயல்படும்.
👀👀 ⚘ 👀👀
உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை இந்தியாவில் அமைக்க ஒப்புதல்
பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை இந்தியாவில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குஜராத்தின் ஜாம்நகரில், பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஜாம்நகரில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்திற்காக, மத்திய அரசு உலக சுகாதார அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளும். இந்த மையம் பாரம்பரிய மருத்துவத்திற்காக, அதன் தலைமையிடத்திற்கு வெளியே அமைக்கப்படும் முதலாவது மற்றும் சர்வதேச மையமாக திகழும்.
இந்த மையம் அமைக்கப்படுவதன் மூலம் ஆயுஷ் மருத்துவமுறைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய முடியும். அத்துடன் பாரம்பரிய மருத்துவம் தொடர்பான சர்வதேச சுகாதார விவகாரங்களில் இந்தியா தலைமை வகிக்கவும் வகை செய்யும். தரமான, பாதுகாப்பான, நோய்களை குணப்படுத்தக் கூடிய அதிக திறன் கொண்ட மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் பாரம்பரிய மருந்துகளை முறையாக பயன்படுத்தவும் இந்த மையம் உதவிகரமாக இருக்கும்.
ஐந்தாவது ஆயுர்வேத தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், 13 நவம்பர் 2020 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ராஸ் அதானம், இந்தியாவில் இந்த மையம் அமைக்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
👀👀 ⚘ 👀👀
இந்திய மருந்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், ஜெர்மனியின் டிஎஃப்ஜி இடையே ஒப்புதல்
இந்திய மருந்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், ஜெர்மனியின் டிஎஃப்ஜி இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய மருந்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், ஜெர்மனியின் டிஎஃப்ஜி இடையே 2021 டிசம்பரில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பரஸ்பரம் பயன்பெறும் மருத்துவ அறிவியல், நச்சுத்தன்மை நோயியல், வெப்ப மண்டல நோய், அரிய வகை நோய்கள் உள்ளிட்ட சுகாதார ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். அறிவியல் ஆராய்ச்சி திட்டங்களுக்கு கூட்டாக நிதி வழங்குதல், ஆராய்ச்சியாளர்கள் பரிமாற்றம், கூட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகளுக்கு நிதி வழங்குதல் உள்ளிட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் ஒத்துழைப்பதும் இதில் அடங்கும்.
👀👀 ⚘ 👀👀
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும்
அமெரிக்க சுகாதாரம் ஒப்பந்தம் ஒப்புதல்
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் தேசிய சுகாதார நிறுவனம், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் தேசிய சுகாதார நிறுவனம், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, சென்னையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து புதுமையான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதுடன், தொற்றுநோயியல், மருந்து, மூலக்கூறு உயிரியல், மருத்துவ பூச்சியியல், ஒட்டுண்ணியியல், தடுப்பு மருந்து, நுண்உயிரியல் மற்றும் தொற்றுநோயியல், துறைகளில் நோய்த் தடுப்புக்கான புதிய தொழில்நுட்பங்கள், நோய் கண்டறிதல் மற்றும் வெப்பமண்டல தொற்றுநோய் மற்றும் ஒவ்வாமை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்.
==============
No comments
Thank you for your comments