Breaking News

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால் வழங்கல்

சேலம் :

சேலம் எஸ்.பழனியாண்டி முதலியார் நினைவு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந் நிகழ்ச்சியானது ரோட்டரி கிளப் ஆப் சேலம் மிட் டவுன் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளி நல அமைப்பு சங்கம் மற்றும் சம்பந்தம் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு சேலம் மாநகராட்சியின் மேயர் இராமச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

எஸ் பழனியாண்டி முதலியார் நினைவு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் தேவராஜன் அவர்கள் பேசும்போது சேலம் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பகுதிகளில் அனேக மாற்றுத்திறனாளிகள் செயற்கைக்கால் பொருத்தும் வசதி இருந்தும்.அதுகுறித்து அறியாதவர்களாக இருந்தனர். 

இதைக் கருத்தில் கொண்டு சம்பந்தம் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் ரோட்டரி கிளப் ஆப் சேலம் மிட் டவுன் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளி நல அமைப்பு சங்கம் மூலமாக செயற்கை கால்களுக்கு பதிவு செய்து காத்திருப்போர் பட்டியல் கொண்டு செயற்கை கால்கள் தயாரிக்கும் நிறுவனமான முக்தி பவுண்டேஷன் நிறுவனத்துடன்,ஒரு வார கால முகாம் நடத்தி அதன் மூலம் தேவைப்படுவோருக்கு இலவசமாக செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு வருகிறது. 

இந்த சேவையை தொடர்ந்து 32 வருடங்களாக நடைபெற்று வருகிறது. முக்தி பவுண்டேஷன், சென்னை நமது வேண்டு கோளுக்கிணங்க வருடம் ஒருமுறை ஜனவரி மாதம் ஒரு வார கால முகாம் சேலம் எஸ்.பழனியாண்டி முதலியார் நினைவு மருத்துவமனையில் நடத்தி செயற்கைக்கால் தேவைப்படுவோருக்கு அளவுகள் எடுத்து சேலம் மாநகரிலேயே ஒருவாரம் தங்கி குறைந்தபட்சம் 100 பேருக்கு செயற்கை கால் செய்து மாற்றும் திறனாளிகளுக்கு பொருத்தி வருகின்றனர்.

இதன் மூலம் கடந்த 32 வருடங்களில் 3500 க்கும் மேற்பட்டோர் செயற்கை கால்கள் பொருத்தி பயனடைந்துள்ளனர். 

ரோட்டரி கிளப் ஆப் சேலம் மிட் டவுன், தலைவர் புருஷோத்தமன் செயலாளரான பொருளாளர் செந்தூர் குமரன், மாற்றுத்திறனாளி சங்கத் தலைவர் அத்தியண்ணன், சம்பந்தம் மில்ஸ் தலைவர், மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் இதர இயக்குனர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தனர்.

No comments

Thank you for your comments