Breaking News

காஞ்சிபுரம் முதல் தைப்பாக்கம் புதிய பேருந்து இயக்கம்...

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தைப்பாக்கம் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு புதிய பேருந்து காஞ்சிபுரம் முதல் தைப்பாக்கம் புதிய வழித்தடத்தை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  க.செல்வம், மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார்,  காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், காஞ்சி வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், ஆர்.இளஞ்செழியன், பி.எம்.நீலகண்டன் மற்றும் தலைவர், ஊராட்சி கவுன்சிலர்கள், போக்குவரத்து நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.











No comments

Thank you for your comments