Breaking News

இயற்கையோடு ஒன்றிணைந்து வேளாண்மை செய்வோம்.

காஞ்சிபுரம்:

தொன்போஸ்கோ வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிலும் பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்கதிர்பூர் கிராமத்தில் அவர்கள் விவசாயிகளின் முன்பு உயிர்உரமான ரைசோபியம் கொண்டு நிலக்கடலையில் விதை நேர்த்தி இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், மஞ்சள் மற்றும் நீலநிற ஒட்டும் பொறிகள், இனக்கவர்ச்சி பொறி, சூரிய ஒளி விளக்கி பொறி, கோனோ வீடரைக் கொண்டு நெல்பயிரில் கலை கட்டுப்படுத்தும் முறை, பீஜாமிர்தம் தயாரித்தில், அசோல்லா வார்ப்பு முறைகள், கனஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகளை செய்முறை வடிவில் விளக்கினர்.

இந்நிகழ்வின் போது கீழ்கதிர்பூர் ஊராட்சி மன்ற தலைவர், விவசாய பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.










No comments

Thank you for your comments