Breaking News

பாலஸ்தீனத்தில் இந்திய தூதர் உயிரிழப்பு-ஜெய்சங்கர் இரங்கல்

பாலஸ்தீனம், மார்ச் 7-

பாலஸ்தீனத்தின் ராமல்லாவில் இந்திய தூதர் முகுல் ஆர்யா சடலமாக மீட்கப்பட்டார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் ராமல்லா பகுதியில் இந்தியத் தூதரகம் அமைந்துள்ளது. இங்கு இந்திய தூதராக பணிபுரிந்தவர் முகுல் ஆர்யா. இந்நிலையில், ரமல்லாவில் உள்ள அவரது பணியிடத்தில் இந்திய தூதர் முகுல் ஆர்யா உயிரிழந்ததாக பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. 

முகுல் ஆர்யாவின் மறைவு குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராமல்லாவில் உள்ள இந்திய பிரதிநிதி முகுல் ஆர்யா காலமானது அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஒரு திறமையான அதிகாரி. அவரது குடும்பத்தினர், அன்புக்கு உரியவர்களுக்கு  இரங்கல் என தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments