மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
சேலம் :
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெண் தீக்குளிக்க முயன்றனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி குஞ்சம்மாள். இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக இன்று காலை வந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது அவர் தன் கையில் கேனில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி தலையில் தண்ணீரை ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
மூதாட்டியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் காடையம்பட்டி பகுதியில் 2 சென்ட் நிலத்தில் வீட்டை கட்டி வாழ்ந்து வருகிறேன். ஆனால் எனது அண்ணன் நல்லமுத்து, என்னை மிரட்டி வீட்டை எழுதி கொடுக்க வேண்டும் என்று தினமும் தொந்தரவு செய்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்து என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி அடித்தார். எனது வீட்டை அபகரித்துக் கொண்ட சகோதரர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார், மூதாட்டியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments
Thank you for your comments