56 ஏக்கர் ஆக்கிரமிப்பு விவசாய நிலம் மீட்பு
50 வருடங்களாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்த 56 ஏக்கர் விவசாய நிலம் மீட்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட பிச்சுவாக்கம் பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் கிட்டத்தட்ட 56 ஏக்கர் விவசாய நிலத்தை 50 வருடங்களாக ஆக்கிரமித்து இருந்தது வருவாய் துறையினருக்கு தகவல் வந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சைலேந்திரன் மற்றும் வட்டாட்சியர் ஜெயகாந்தன் வருவாய் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்ததில் 56 ஏக்கர் விவசாய நிலம் ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கிரேன் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் 56 ஏக்கர் விவசாய நிலம் மீட்கப்பட்டது.
இதன் மூலம் இந்த சுற்று வட்டாரத்தில் உள்ள 100 விவசாய நிலங்களுக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என்றும் இதன் மதிப்பு 20 கோடி என்றும் முறையாக விவசாயம் செய்து அறுவடை செய்துள்ளதால் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் தற்போதைக்கு கிடையாது என்றும் வருவாய் துறையினர் தகவல் அளித்தனர்.
No comments
Thank you for your comments