Breaking News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (30ம் தேதி) டெல்லி பயணம்

சென்னை, மார்ச் 29-

சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 31ம் தேதி பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த 24ம் தேதி துபாய் புறப்பட்டு சென்றிருந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் அபுதாபி சென்றார்.

நேற்று மாலை அபுதாபியில் அவருக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை சென்னை வந்து சேருகிறார்.

இதன்பிறகு முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக 30&ம் தேதி (புதன்கிழமை) இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 31ம் தேதி பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேச உள்ளார்.

அப்போது நீட் மசோதாவுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாகவும், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க உள்ளார்.

மேலும் டெல்லியில் ஏப்ரல் 2ம் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கிறார். அதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசுகிறார்.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி ஆகியோரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார்.

மறுநாள் (ஏப்ரல் 1ம் தேதி) காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல்காந்தி ஆகியோரை ஒரே இடத்தில் சந்தித்து பேசுகிறார். அதன் பிறகு கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய தலைவர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். 2ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா கலைஞர் அறிவாலய திறப்பு விழா நடக்கிறது அதில் கலந்து கொண்டு அண்ணா கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதன் பிறகு அன்று இரவே சென்னை திரும்புகிறார்.

No comments

Thank you for your comments