Breaking News

காலச்சக்கரம் செய்தி எதிரொலி : 3 மாத காலமாக இருளடைந்த இறகு பந்து அரங்கத்தில் வெளிச்சம்

காஞ்சிபுரம், மார்ச் 6-

3 மாதங்களாக பழுதடைந்து செயல்படுவதால் அங்கு வரும் இறகு பந்து விளையாட்டு வீரர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி அவதியுற்றனர். நமது காலச்சக்கரம் நாளிதழில் வந்த செய்தியின் எதிரொலியால் தீர்வு கண்ட இறகு பந்து விளையாட்டாளர்கள். 

காஞ்சிபுரம் பழைய ரயில்வே சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் வளாகத்திலுள்ள உள் இறகு பந்து அரங்கில் உள்ள மின்னொளிகள் கடந்த 3 மாதங்களாக பழுதடைந்து இருளடைந்தது. இதனால் அங்கு வரும் இறகு பந்து விளையாட்டு வீரர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருவதை எண்ணி நமது காலச்சக்கரம் நாளிதழின் காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் ஜாபர் அவர்கள் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, அந்த கோரிக்கை செய்தியினை நாளிதழில் அச்சடித்து வெளியான சில மணி நேரங்களிலேயே எந்தெந்த  மின்னொளிகள் எரியாத நிலையில் இருந்ததோ அதையெல்லாம் மாவட்ட நிர்வாகமும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக விரைவில் சரிசெய்து மற்றும் புதுப்பித்து  கோரிக்கையினை நிறைவேற்றியுள்ளனர்.

எனவே இதற்க்கு உண்டான தக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு விளையாட்டு வீரர்களுடன் இணைந்த காலச்சக்கரம் நாளிதழ் குழுமத்திற்கு நன்றி கூறி பாராட்டுகிறோம் என்று இறகு பந்து விளையாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட செய்தியாளர் ஜாபர்






No comments

Thank you for your comments