Breaking News

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று கூடுகிறது

 புதுடெல்லி, மார்ச் 14-

மத்திய அரசு பொதுச் சொத்துகளை விற்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு பகுதிகளாக நடைபெறும். என அறிவிக்கப்பட்டு முதல் பகுதி 2022, ஜனவரி 31ம்தேதி  தொடங்கி, 2022 பிப்ரவரி 11ம் தேதி முடிவடைந்தது.  இந்நிலையில், இரண்டாம் அமர்வு, 2022 மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதிஅன்று முடிவடையும். 2022,  மார்ச் 18 அன்று, ஹோலி பண்டிகையை முன்னிட்டு, அமர்வு இருக்காது.

முதல் அமர்வு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதன்பின் பொருளாதார ஆய்வறிக்கையும், அதன்பின் நிதிஅமைச்ர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அடுத்த ஒருவாரம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.  

மாநிலங்களவையில் 4 நாட்கள் தனிநபர் மசோதாவும், கேள்வி நேரம் ஒருமணிநேரமும் நடக்கும். அதன்பின் கேள்விநேரத்துக்கு பிந்தைய நேரம்  அரை மணிநேரமாக இருந்தது ஒருமணிநேரமாக நடத்தப்பட்டு அரைமணிநேரம் இடைவேளை விடப்படும்.பட்ஜெட் கூட்டத்தின் முதல் பகுதியில் 10அமர்வுகள் நடந்து பிப்ரவரி 11ம்தேதிமுடிந்தது. அப்போது மாநிலங்களவையின் ஆக்கப்பூர்வம் என்பது 101.4% இருந்தது

குடியரசுத் தலைவர் உரைக்குப்பின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிபின் மாநிலங்களவை தொடர்ந்து 8 நாட்கள் எந்தவிதமான இடையூறுமின்றி நடந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்குப்பின் மாநிலங்களவை இதுபோல் தடையின்றி நடந்தது இதுவே முதல்முறை. இதற்குமுன் கடந்த 2019ம் ஆண்டு மழைக்காலக் கூட்டத்தொடரில் தொடர்ந்து 13 அமர்வுகள் தடையின்றி நடந்திருந்தது.

2-வது அமர்வு

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு பகுதியை மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 8ம்தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பாராளுமன்றம் இன்று கூடுகிறது.

கூடுதல் நேரம்

19 அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு நாளும் கூடுதலாக ஒருமணிநேரம் அமரும்போது, மாநிலங்களவைக்கு 64 மணிநேரம் 30 நிமிடங்கள் கிடைக்கும். இதன் மூலம் மக்களுக்கு தேவையான, முக்கியத்துவம்வாய்ந்த விவகாரங்களை எடுத்து விவாதிக்க உதவியாக இருக்கும்.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று அலை குறைந்து வருவதால், 2022 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வுகள் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் மீண்டும் தொடங்க உள்ளது. தொற்றுநோய் பரவியதில் இருந்து நாடாளுமன்றம் வழக்கம் போல் செயல்படுவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும், சபைகள் முந்தைய அமர்வுகளைப் போலவே கோவிட்-19 நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதிக்கான இருக்கை ஏற்பாடுகள் குறித்த முடிவை மாநிலங்கள் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் கூட்டாக எடுத்தனர்.   இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பொதுச் செயலாளர்களும் கூடி ஆலோசனை நடத்தினர். கோவிட்-19 தொற்றுநோயின் மூன்றாவது அலையில் தொற்று பாதிப்பு கணிசமான அளவு குறைந்துள்ளது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், வைரஸுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியும், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, விரிவான தடுப்பூசி திட்டங்கள் திருப்திகரமாக நடைபெறுவதால், நாடாளுமன்ற கூட்டத்தை வழக்கம் போல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நடைபெற உள்ளது. இதில் உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி முதல் முறையாக வெற்றி பெற்றது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் இன்று 2வது அமர்வு கூட்டம் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா உறுப்பினர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ள உள்ளனர்.

ஆனால் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு பொதுச் சொத்துகளை விற்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர்.

இதற்கு முன்னோட்டமாக, காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் சோனியா காந்தி இல்லத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள், காங்கிரஸ் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ஆனந்த் சர்மா, கே.சுரேஷ், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், இன்று நடைபெறும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்கள், விவசாயிகள் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை எழுப்ப முயற்சிப்போம் என மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார். 

மேலும் சில சட்ட முன்வடிவுகளுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே பாராளுமன்ற கூட்டத் தொடர் அனல் பறப்பதாக இருக்கும். தினமும் அமளியை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் திட்டத்தை முறியடித்து பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

No comments

Thank you for your comments