Breaking News

ஈரோடு மாநகராட்சியில் ரூ.13.15 கோடி மதிப்பிட்டில்‌ பல்வேறு புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைத்தார்‌ அமைச்சர்‌ சு.முத்துசாமி

ஈரோடு:

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ ரூ.13.15 கோடி மதிப்பிட்டில்‌ பல்வேறு புதிய திட்டப்பணிகளை வீட்டுவசதி மற்றும்‌ நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்‌ சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்‌.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி  தலைமையில்  தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனம் தலைவர்‌ ‌ குறிஞ்சி என்‌.சிவகுமார்‌ அவர்கள்‌ முன்னிலையில்‌,  வீட்டுவசதி மற்றும்‌ நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்‌ சு.முத்துசாமி ரூ.13.15 கோடி மதிப்பிட்டில்‌ பல்வேறு புதிய திட்டப்பணிகளை இன்று (14.03.2022) தொடங்கி வைத்தார்‌.


இந்நிகழ்ச்சியில்‌, வீட்டுவசதி மற்றும்‌ நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்‌ சு.முத்துசாமி, ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பழையபாளையம்‌ - ரங்கம்பாளையம்‌ சாலை (வழி) நல்லியம்பாளையம்‌ கி.மீ 3/10-ல்‌ ரூ.1.20 கோடி மதிப்பீட்டிலும்‌, தொட்டிபாளையம்‌ ஆர்‌.எஸ்‌. - வேப்பம்பாளையம்‌ சாலை கி.மீ 0/6-ல்‌ ரூ.1.85 கோடி மதிப்பீட்டிலும்‌, ஈரோடு - பெருந்துறை சாலை  கி.மீ 10/4-ல்‌ பிரிந்து தொட்டிபாளையம்‌ வழியாக நசியனூர்‌ செல்லும்‌ சாலை கி.மீ.1/8-ல்‌ ரூ.1.85 கோடி மதிப்பீட்டிலும்‌ சிறுபாலம்‌ திரும்ப கட்டுதல்‌ பணியினையும்‌, கொளத்துப்பாளையம்‌ - கொங்கம்பாளையம்‌ சாலை (வழி) எல்லப்பாளையம்‌ கி.மீ 0/0-1/6 வரை ரூ.2.00 கோடி மதிப்பீட்டில்‌ ஒருவழித்தடத்தை இடைவழித்தடமாக அகலப்படுத்துதல்‌ மற்றும்‌ மேம்பாடு செய்தல்‌ கி.மீ 0/4, 0/6, 0/8, 07/10, 1/2, 1/6, 1/8-ல்‌ சிறுபாலம்‌ திரும்பக்கட்டுதல்‌ மற்றும்‌ கி.மீ 0/6, 07/8, 1,/2-ல்‌ தடுப்புச்‌ சுவர்‌ கட்டுதல்‌ பணிகளையும்‌, ஈரோடு- பவானி சாலையில்‌ இருந்து வீரபாண்டிபுதூர்‌ வழியாக கருப்பக்கவுண்டன்புதூர்‌ செல்லும்‌ சாலை கி.மீ 17/4-ல்‌ ரூ.2.00 கோடி மதிப்பீட்டில்‌ சிறுபாலம்‌ திரும்ப கட்டுதல்‌ பணியினையும்‌, புறவழிச்சாலையிலிருந்து ஈரோடு - பவானி சாலைக்கு செல்லும்‌ சாலை (வழி) ராமநாதபுரம்புதூர்‌ கி.மீ. 0/0-3/4 வரை ரூ.3.75 கோடி மதிப்பீட்டில்‌ ஒருவழிதடத்தை இடைவழித்தடமாக அகலப்படுத்துதல்‌ மற்றும்‌ மேம்பாடு செய்தல்‌ கி.மீ0/4-ல்‌ தடுப்புச்சுவர்‌ கட்டுதல்‌, கி.மீ 1/6, 17/10, 2/2 சிறுபாலம்‌ கட்டுதல்‌ மற்றும்‌ கி.மீ 17/10, 27/10, 3/2, 3/4ல்‌ மழைநீர்‌ வடிகால்‌ கட்டுதல்‌ பணிகளையும்‌ மற்றும்‌ கொல்லம்பாளையம்‌, பாரதி நகர்‌ ஆகிய பகுதிகளில்‌ தலா தேசிய நகர்புற சுகாதாரத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.25.00 வீதம்‌ ரூ.50.00 இலட்சம்‌ மதப்பிட்டில்‌ நகர்புற சுகாதார நலவாழ்வு மையம்‌ கட்டும்‌ பணியினையும்‌ என மொத்தம்‌ ரூ.13.15 கோடி மதிப்பீட்டில்‌ பல்வேறு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்‌.

இந்நிகழ்ச்சிகளில்‌, ஈரோடு மாநகராட்சி துணை மேயர்‌ செல்வராஜ்‌, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்‌ காயத்திரி இளங்கோ, ஈரோடு மாநகராட்சி நகர்‌ மன்ற உறுப்பினர்கள்‌ எஸ்‌.சக்திவேல்‌, எல்‌.குணசேகரன்‌,   கே.தண்டபாணி,  ராமலிங்கம்‌, கே.எஸ்‌. ஆதிஸ்ரீதர்‌, செந்தில்‌, செல்லபொன்னி, மேனகாநடேசன்‌, கவுசல்யா, மாநகராட்சி செயற்பொறியாளர்‌ விஜயகுமார்‌, ஈரோடு மாநகராட்சி நகர்‌ நல அலுவலர்‌ மரு.பிரகாஷ்‌ உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

No comments

Thank you for your comments