திமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடுDMK
சென்னை:
தூத்துக்குடி, கும்பகோணம், காஞ்சிபுரம் மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி முக்கிய பெரிய கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் வார்டு பங்கீடு குறித்து கடந்த 4 நாட்களாக பேசி வந்தது.
கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி, கும்பகோணம், காஞ்சிபுரம் மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும் விழுப்புரம், திருக்கோவிலூர், கோட்டக்குப்பம் ஆகிய நகராட்சி வார்டுகளுக்கும், மதுராந்தகம், விக்கிரவாண்டி, வளவனூர், சுவாமிமலை, பாபநாசம், திருப்பனந்தாள், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, கழுகுமலை, கடம்பூர் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
No comments
Thank you for your comments