Breaking News

ஒரு வாக்கு கூட வாங்காத அதிமுக வேட்பாளர்

புதுக்கோட்டை, பிப்.22-

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி ஏழாவது வார்டு அதிமுக வேட்பாளர் முகம்மது இப்ராம்சா ஒரு வாக்குகள் கூட பெறவில்லை.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி ஏழாவது வார்டு அதிமுக வேட்பாளர் முகம்மது இப்ராம்சா  ஒரு வாக்குகள்  கூட பெறவில்லை. இந்த வார்டில் பதிவான 463 வாக்குகளில் ஒரு வாக்கு கூட அதிமுக வேட்பாளருக்கு கிடைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.

No comments

Thank you for your comments