Breaking News

முதலாளிகளுக்கு அறிவுரை வழங்கிய தொழிலாளி... கைகளைத் தட்டி வாழ்த்துக்களை தெரிவித்த முதலாளிகள்...

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் லைசென்ஸ் மற்றும் வாகனங்களுக்கு புதிதாக நம்பர் பதிவு செய்யும் வருபவர்களுக்கு சாலையில் எப்படி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பது குறித்து விளக்கமளித்தார் வட்டார போக்குவரத்து அலுவலர் மு கருப்பையன்.


வட்டார போக்குவரத்து அலுவலர் மு கருப்பையன்,  50க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகள் இடையே சாலையில் செல்லும் பொழுது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், வளைவில் செல்லும் பொழுது சாலைகளில் நமக்கு பின்னால் வாகனங்கள் வருகிறதா என்பதை தெரிந்துக்கொள்ள தனது வாகனத்திலுள்ள கண்ணாடியை பார்த்து  வருகிறதா இல்லையா என்பதை சரிபார்த்து நமது கையினாலும் திரும்புவதற்கு சிக்னல் செய்து வாகனம் வரவில்லை என்பதை உனர்ந்த பின் செல்ல வேண்டும், சாலையில்  வாகனங்கள் ஓட்டுமா பொழுது  குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதும் முழுமையாக கைவிட வேண்டும், விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக வாகனங்களை சரிவர கவனிக்காமல் சென்றால் விபத்துக்குள்ளாகும் எனவே வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாகவும் செல்ல வேண்டும் என்பது குறித்து இன்று விளக்கம் அளித்தார்.

நான் உங்களுக்கு இதனை தெரிவிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை இருந்தாலும் நான் உங்களுடைய வரிப்பணத்தில் ஊதியம் வாங்கிய ஒரு தொழிலாளி எனக்கு நீங்கள் தான் முதலாளி எனவே நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் நீங்கள் நன்றாக இருந்தால் தான் நாங்கள் நன்றாக இருக்க முடியும் என்பதையும் தெரிவித்தார் இதனால் வாகன ஓட்டிகள் இவருக்கு கைகளைத் தட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்...

No comments

Thank you for your comments