அதிமுக வேட்பாளர் சுமதி வேட்பு மனு தாக்கல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி 5வது வார்டு அதிமுக வேட்பாளர் சுமதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஊரக நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 5வது வார்டு அதிமுக வேட்பாளர் சுமதி காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் கணேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம், கழக அமைப்புச் செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா. கணேசன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆர். டி. சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம், மாவட்ட பாசறை செயலாளர் வி ஆர் மணிவண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்க்குமார், நகர செயலாளர் என்.பி.ஸ்டாலின், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments