நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை...
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி முடிந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் 3 அடுக்கு பாதுகாப்புடன் 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன முதற்கட்டமாக தபால் ஓட்டு எனப்படும்.
மாநகராட்சியில் நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ள 155 வார்டுககளில் பதிவான வாக்குகள் 2 மையங்களில் எண்ணப்பட உள்ளன. 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.ஒவ்வொரு மையத்திலும் சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படும்.
மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் அறைகளில் 35மேஜைகளில் எண்ணப்பட உள்ளன. நகராட்சியில் பதிவான 3 அறைகளில் வாக்குகள் 20 மேஜைகளில் எண்ணப்பட உள்ளன.அதிகபட்சமாக மாநகராட்சியில் 16 சுற்றுகள் வரை நடைபெறும். மாங்காடு குன்றத்தூர் நகராட்சியில் 9 சுற்றும், ஸ்ரீபெரும்புதூர் உத்தரமேரூர் பேரூராட்சியில் 9 சுற்றும், வாலாஜாபாத் பேரூராட்சியில் 6 சுற்றிலும் எண்ணப்பட உள்ளன. 70 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.ஆறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து 18 நுண்பார்வையாளர்கள்.
தபால் வாக்குகள் 8 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.
நகராட்சி, பேரூராட்சிகளில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு மிஷினில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டுக்கும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மிஷினில் பதிவானவை எண்ணப்படும். பூத் ஏஜென்ட்களுக்கு தேர்தல் அலுவலர் வழங்கிய ஐடி கார்டு, ஆதார்/வாக்காளர் அட்டை, தடுப்பூசி சான்றிதழ்/கொரோனா தொற்று இல்லை எனும் சான்றிதழ் அவசியம்.
அலைபேசி, கேமரா எடுத்த வர அனுமதி இல்லை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments
Thank you for your comments