Breaking News

இந்தியா- இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

புதுடெல்லி, பிப்.7-

இந்தியா, இலங்கை அமைச்சர்களின் சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் பேசப்பட்டது.

இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் 3 நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். அவர் இன்று டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் பேசப்பட்டது.

கடுமையான அந்நிய செலாவணி மற்றும் எரிசக்தி நெருக்கடியில் தத்தளித்து வரும் இலங்கைக்கு, இந்தியா 500 மில்லியன் டாலர் கடன் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 2ம் தேதி கையெழுத்திட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பீரிஸை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

பீரிஸின் சுற்றுப்பயணத்தின்போது, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்தியா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Thank you for your comments