5 நாள் மட்டுமே நெல் கொள்முதல்- உழவர் உற்பத்தி குழு புகார்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாளில் தொடூர் கிராமத்தை சேர்ந்த உழவர் உற்பத்தி குழுவினர் புகார் மனு அளித்தார்.
அந்த புகார் மனுவில், காஞ்சிபுரம் அடுத்த 144 தண்டலம் கிராமத்தில் கடந்த மாதம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் அருகில் உள்ள தொடூர் , நெல்வாய், தண்டலம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவர் என தெரிவிக்கபட்டது.
இந்நிலையில் இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் என் எல்.ஆர் நெல் வகைகளை தற்போது வாங்க மறுக்கப்பட்டு வருவதாகும். அரசு நிவாரணத்தை வாங்கினால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய முடியாது என்ற அரசாண உள்ளதால் அதை விண்ணப்பிக்க கூட இப்பகுதி விவசாயிகள் ஈடுபடவில்லை .
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒருதலைப்பட்சமாக எங்கள் பகுதி விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்.
எங்கள் பகுதி கிராம விவசாயிகள் முறையாக ஆன்லைனில் நெல் கொள்முதல் செய்ய பதிவு செய்து அதற்கான டோக்கன் கடந்த பிப்ரவரி 7 முதல் 14 வரை பெற்ற நிலையில் இது வரை நெல் கொள்முதல் செய்யாததால் தங்களுக்கு அதிக இழப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ய அறிவுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இது மட்டுமில்லாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனால் துவங்கப்பட்டு ஐந்து நாட்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
No comments
Thank you for your comments